Winners Details

நன்றி! நன்றி! நன்றி!

கொரோனா ஊரடங்கு காலத்தில் நாங்கள் மேற்கொண்ட புதிய முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும், ஊக்கமும் கொடுத்து சிறிய அளவிலான ஓவியப்போட்டியை தமிழக அளவிலான ஓவியப்போட்டியாக்கிய தங்களுக்கும், திறமையை வெளிப்படுத்திய தங்கள் குழந்தைகளுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பரிசுகள் குறித்த விபரம் :


11 ஜூன் 2020 மதியம் 1 மணி முதல் நாள் ஒன்றுக்கு 10 பேர் வீதம் 5 நாட்களுக்கு அறிவிக்கப்படுவார்கள்

1. பங்கு பெற்ற அனைவருக்குமான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

2. சான்றிதழ்கள் அவரவர் இல்லங்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

3. ஊக்கப்படுத்துவதுதான் இந்த ஓவியப்போட்டியின் நோக்கமே அன்றி முதல், இரண்டாம், மூன்றாம் என்று வகைப்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவது அல்ல.

4. அந்த வகையில் முதலில் 25 பரிசுகள் மட்டும் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றை 50 எண்ணிக்கையாக உயர்த்தி உள்ளோம்.

5. பல்வேறு தலைப்புகளில் அந்தப் பரிசுகளை வகைப்படுத்தி அவற்றை தங்கள் முன் இந்தப்பக்கத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்.

6. அனைவருடைய ஓவியமும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. அடுத்த 5 நாட்களுக்குள் அனைத்துப் பதிவேற்றமும் நிறைவடையும்.

7. அதிகபட்சமாக இந்த மாத இறுதிக்குள் சான்றிதழ், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள், ஊக்கப்பரிசுகள் தங்கள் இல்லம் தேடி வந்தடையும்.

ஏன் தாமதம்?


* ஆன்லைன் ஓவியப்போட்டி என்பது எங்களுக்கு இதுவே முதல் அனுபவம்.

* எதிர்பார்த்ததைக்காட்டிலும் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.

* திறமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலமுறை கால அவகாசம் நீட்டிப்பு 29‍ மே 2020 வரை.

* ஊரடங்கு காரணமாக தனி நபர் மட்டுமே பல்வேறு பணிகளுக்கு இடையே அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய சூழ்நிலை.

* எங்களை ஊக்கப்படுத்திய தங்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ் மட்டுமன்றி பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றோம்.

* எதிர்பார்த்ததைக்காட்டிலும் செலவீனங்கள் அதிகம் உள்ளதால் நன்கொடையாளர்களின் உதவியை நாடி வருகின்றோம்.

சிறப்பு குறிப்புகள் :


* ஓர் உண்மை சேவைக்கான பிணையம் ( நெட்வொர்க் ) என்ற அடிப்படையில் செயல்பட்டுவரும் எங்களுக்கு நல்ல தொடர்பாக நீங்கள் கிடைத்துள்ளீர்கள்.

*எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பல்வேறு போட்டிகள் நடத்திடவும், பல்வேறு சேவைகள் செய்திடவும் நீங்கள் துணை நிற்பீர்கள் என்றால் எங்களுடன் சேர்ந்து கைகோர்க்க தன்னார்வலராக தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

இங்கே கிளிக் செய்யவும்.

Make a difference to few lives...

"We make a living by what we get, But we make a life by what we give." Giving is Happiness - Let us celebrate the Joy of Giving!